நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் புலத்துறை மற்றும் தேனி எல்.எஸ் மில்ஸ் லிமிடெட் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்வு 29.10.2026 அன்று சிறப்பாக நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் திருமதி. அமலா வரவேற்புரை வழங்கினார்.இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவியர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதுடன், நடைமுறைப் பயிற்சியையும் வழங்குவதாகும். கல்வி நிறுவனத்திற்கும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி மாணவியர்களின் திறன்களையும் படைப்பாற்றலையும் வளர்ப்பதற்கு தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகும். தொழில்நுட்பத் துறையில் நிலவும் புதிய மாற்றங்கள் மற்றும் நடைமுறைச் செயல்பாடுகள் குறித்த தொழில் சார்ந்த அறிவையும் அனுபவத்தையும் மாணவியர்கள் பெறுவதற்கு இந்நிகழ்வு உதவுகிறது. இதன் மூலம் மாணவியர்களிடம் தொழில்நுட்பத் திறன் நடைமுறை அறிவு, சிந்தனைத் திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றை வளர்த்து எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன்களைப் பெற்றுத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதே ஆகும்.
நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் திரு.வி.எம்.கே.கே.ராதாகிருஷ்ணன் அவர்கள், இணைச் செயலாளர் திரு.கே.வன்னியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா அவர்கள் துணை முதல்வர் திருமதி.சுசீலா சங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.சிறப்பு விருந்தினராக எல் எஸ் மில்ஸ் நிறுவனத்தின் மனிதவளத் துறை, துணை பொது மேலாளர் திரு.நிவாஸ் அவர்கள் மற்றும் மனிதவளத் துறை உதவிப் பொது மேலாளர்கள் திரு.சரவணகுமார் மற்றும் திரு.ஜெயின் ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தன்னாட்சி தேனி மற்றும் எல் எஸ் மில்ஸ் லிமிடெட், தேனி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கல்வி, ஆராய்ச்சி, பரிமாற்றங்கள் போன்ற பரஸ்பர ஒத்துழைப்பிற்காக நடைபெற்றது. நிறைவாக வணிகவியல் துறை உதவி பேராசிரியர் திருமதி. சுகந்தி சண்முகப்பிரியா அவர்கள் நன்றிகூற நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது