NEW அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, செய்தியாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருப்பதாவது; என்னைப் பார்த்து தவெகவினர் ஏன் பயப்படுகிறார்கள்? சொந்த பந்தம் பார்த்தால் தமிழ்நாட்டில் எந்தத் தொகுதிகளிலும் போட்டியிட முடியாது. உறவுகள் வேறு, அரசியல் வேறு. நாம் தமிழர் கட்சி 5 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றது. அம்பாசமுத்திரம் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன்” என்றார்.அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக போட்டியிடுகிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த சீமான், அனைத்து சாதி சமயத்துக்கும் நான் பொது வேட்பாளர். தோற்று இருக்கிறோம், துவண்டதில்லை. இது நான் ஏற்றுக்கொண்ட கொள்கை, சமரசம் இல்லாமல் சண்டை செய்வேன். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பெரிய கட்சிகள் எல்லாம் வெளியேறின. திமுகவும் நாங்களும் போட்டியிட்டோம். அப்போது நாங்கள் பொது வேட்பாளரா? அதிகாரத்தை எதிர்த்து போட்டியிட முடியாமல் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விலகின. தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்டும் போட்டியிடவில்லை. நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது என்றார்
இராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை, கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு வேலைவாய்ப...
கோவை திருச்சி ரோடு V.G.M. மருத்துவமனையின் ஒரு பிரிவான விஜிஎம் ஆர்த்தோ கேர், மூட்டுவலி மற்றும் மூட்டு...
நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் புலத்துறை மற்றும் தேனி எல்.எஸ் மில்ஸ் லிம...