NEW உட்கட்சித் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் 110 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்?
உட்கட்சித் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் 110 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க அக்கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2026 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததை அடுத்து, திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வேகம் எடுத்தன. அதன் ஒருபகுதியாக, திமுகவில் இருந்த 77 மாவட்டங்களுக்கு பதிலாக 110 மாவட்டங்களாக உயர்த்தி மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.இதையடுத்து, மாவட்ட வாரியாக ஒன்றியம், வட்டம், பேரூர், பகுதி என பிரித்து திமுக தலைமைக்கு சமர்ப்பிப்பதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. மேலும், 110 மாவட்டங்களுக்கும் உட்கட்சித் தேர்தலை நடத்தி மாவட்ட செயலாளர்களை நியமிக்கவும் அக்கட்சி முடிவு செய்திருந்தது. இதனிடையே, இடைத்தேர்தல் வந்தததால் இந்த பணிகள் தொய்வடைந்தன. இந்நிலையில், உட்கட்சித் தேர்தலுக்கு முன்னதாக திமுகவின் 110 மாவட்டங்களுக்கும் செயலாளர்களை நியமிக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதுதொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், மாவட்ட வாரியாக ஒன்றியம், வட்டம், பேரூர் மற்றும் பகுதி வாரியாக நிர்வாக அமைப்புகளை பிரித்து, அதற்கான விவரங்களை மூன்று நாட்களுக்குள் கட்சித் தலைமைக்கு சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மேலும், கட்சி மறுசீரமைப்புப் பணிகளில் தவறுகள் அல்லது குளறுபடிகள் இருப்பதாக புகார்கள் எழுந்தால், அதுகுறித்து ஆய்வு செய்ய அரசியல் சாராத ஒரு குழுவை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதவிர, திமுக மாவட்டச் செயலாளர்களுக்கான வயது வரம்பை 70ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதனை 75ஆக உயர்த்த வேண்டும் எனச் சில மாவட்டச் செயலாளர்கள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தக் கோரிக்கையை கட்சித் தலைமை நிராகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது
ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்கள், நடுநகர் அரிமா சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை...
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், கோட்டப்பூண்டி கிராமத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அ...