NEW தீபாவளியையொட்டி 148 ஏழை, எளியோருக்கு புத்தாடைகள்: சக்தி மசாலா நிறுவனத்தினர் வழங்கினர்
ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்கள், நடுநகர் அரிமா சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளியோர் 148 பேருக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்கள் மற்றும் நடுநகர் அரிமா சங்கம் சார்பில் பசிப்பிணி போக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஏழை எளிய முதியோர் மாற்றுத்திறனாளிகள் 148 பேருக்கு தினமும் வசிப்பிடம் தேடிச்சென்று உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயனாளிகள் 148 பேருக்கு புத்தாடை வழங்கும் விழா ஈரோடு பெரியார் நகர், சூளை மல்லிகை நகர் மற்றும் சேனாதிபதி பாளையத்தில் நடைபெற்றது. புத்தாடைகளை சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி.துரைசாமி, நிர்வாக இயக்குநர் டாக்டர் சாந்தி துரைசாமி ஆகியோர் வழங்கினர். நடுநகர் அரிமா சங்க பட்டயத் தலைவர் N.முத்துசாமி, சங்க தலைவர் CA.P.சிவசுப்ரமணியன், செயலாளர்கள் B.ரஞ்சித்குமரன், N.பழனிசாமி, பொருளர் D.திருமுருகன், திட்ட தலைவர் R.சந்திரன் மற்றும் திட்ட இயக்குநர்கள் K.கதிர்வேல், S.சிவக்குமார் மற்றும் அரிமா சங்க நிர்வாகிகளும், அப்பகுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்
உட்கட்சித் தேர்தலுக்கு முன்பாக திமுகவில் 110 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க அக்கட்சித் தலை...
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், கோட்டப்பூண்டி கிராமத்தில் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அ...