NEW பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119வது பிறந்தநாள் விழா மற்றும் 64வது குருபூஜை நாளில் அவரது நினைவிடத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் மற்றும் குருபூஜையையொட்டி பசும்பொன் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜ், கழகக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன், ஆர்.பி.உதயகுமார், ராஜ்யசபா எம்பி தர்மர், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் முனியசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்தில் அவரின் திருவுருவச் சிலைக்கு திமுக தலைவ...
சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.விடுதலைப் ...
இராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை, கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு வேலைவாய்ப...