சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வாரிசுகளான நாடார்களை முன்னேறிய வகுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் சங்கத்தின் இளைஞர் அணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு நாடார் சங்கம் சார்பாக சென்னை ஆலந்தூரில் உள்ள பாரத ரத்னா காமராஜர் திருமண மண்டபத்தில் நாடார் இளைஞர் அணி முதல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து ரமேஷ் நாடார் தலைமை தாங்கினார். இளைஞர் அணி தலைவர் ச.பாஸ்கர் நாடார் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி இயக்குனர் வேல்முருகன், பா.ம.க. பொருளாளர் கவிஞர் திலகபாமா, சத்திரிய சான்றோர் படை தலைவர் ஹரி நாடார், கூடுவாஞ்சேரி நாடார் சங்க தலைவர் பீட்டர், சிம்ம பேரவை தலைவர் ராமசாமி, திருச்சி நெல்லை நாடார் உறவின் முறை தலைவர் ராஜன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 3 நாடார்களுக்கு பணியாற்ற வாய்ப்பு வழங்கிய பிரதமர் மோடிக்கு நன்றி, தமிழக அரசின் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்டிய முதலமைச்சர் விஜய்க்கு நன்றி, சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வாரிசுகளான நாடார்களை முன்னேறிய வகுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும், இதழியல் மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் ஆய்வு இருக்கை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.இன்றைய தமிழ்நாடு உருவாவதற்கு முக்கிய காரணமான திகழ்ந்த தெற்கெல்லை போராட்ட தளபதி மார்ஷல் நேசமணி நாடார் அவர்களுக்கு தலைநகர் சென்னையில் முழுவுருவ சிலை அமைக்கவேண்டும். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய விளையாட்டு துறையில் வியக்கதகு பல சாதனைகள் படைத்த முன்னாள் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பத்ம டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட வேண்டும்ஆவடி மாநகராட்சி கட்டிடத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயர் சூட்ட வேண்டும். தமிழ்நாடு அரசு பனை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கள் விற்பனை தடையை நீக்க வேண்டும்.பி.சி.ஆர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தமிழ்நாட்டில் ரத்து செய்ய வேண்டும்உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில், மாநில பொதுச் செயலாளர்
ஆனைகுடி செ.வீரகுமார், அமைப்பாளர் வீரமாணிக்கம் சிவா, இளைஞர் அணி பொருளாளர் எஸ்.பி.ராமமூர்த்தி, அமைப்பாளர் சிவா, காப்பாளர்கள் சமத்துவ சுதாகர் சதீஷ்லிங்கம், துணைத் தலைவர்கள் பிரதீப், முத்துலிங்கம், ஒருங்கிணைப்பாளர் சந்தனராஜ், நிர்வாகிகள் நாராயண விஜயன், ராஜா மகாராஜ, சுதாகர், சி.பா.பாஸ்கர், எஸ்.ரமேஷ், பா.வேல்குமார், வ.சி.பொன்ராஜ், ஆனந்தகுமார், சு.ராஜேஸ், குரு, இராம்ராஜ், சி.எம்.சசிகுமார், கணேசன், பா.இளையராஜா, சின்னதுரை, சித்திரைகுமார், காசி மாரியப்பன், மகேஷ் ஆதித்தன், சதீஷ்குமார், ரெ.பிரபாகரன், ராமகிருஷ்ணன், ஆதிலிங்கம், சு.மருதவேல், பொன்கீ பெருமாள், அ.வே.பத்மநாபன், பா.திருமுருகன், மேக.பேச்சிராஜன், வீரலெட்சுமணன், கு.நாகராஜ்,
பாலமுருகன், சஞ்சய்,செல்வராஜா, இளையராஜா,அரவிந்தன், ரா.சுரேஷ், ரா.சி.அருள்ராஜ், வே.செந்தில்ராஜ்
ம. ஆனந்த், ம.பெரியசாமி, சிதம்பரேஸன், வெள்ளச்சாமி, சிவா, ராம்ராஜ், முருகன், மகாராஜா, முத்துப்பாண்டி,
ராஜ்குமார், அழகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.