கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாணவர் பேரவை துவக்க விழா
இராமநாதபுரம், ஆகஸ்ட் 28:இராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை, கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026-2027ம் கல்வியாண்டிற்கான மாணவர் பேரவை துவக்க விழா (27.08.2026) அன்று கல்லூரி ஆஞ்சலோ கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் செயலர் அருட்சகோ முனைவர் சூசைநாதன் தி.இ.ச மற்றும் கல்லூரி முதல்வர் அருட்சகோ முனைவர் அருள்ராஜா தி.இ.ச மற்றும் கல்லூரியின் துணை முதல்வர் திருமதி V.சசிரேகா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வைத் தொடங்கி வைத்தனர். நிகழ்வின் தொடக்கமாக வணிகவியல்துறை உதவிப்பேராசிரியர்திருமதி N.கார்த்திகை செல்வி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மாணவர்களுக்கான அறிமுகவுரையினை கல்லூரி திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. K.சுஜாதா அவர்கள் வழங்கினார்கள். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக திரு இருதய சபை சகோதரர்கள் சபையின் பாளையங்கோட்டை மண்டல பொதுக் கவுன்சிலர் அருட்சகோதரர் C.சுனில் பென்ஞ்சமின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர் பிரதிநிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, புதிய மாணவர் பேரவை உறுப்பினர்களின் பொறுப்பேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களுக்கான தலைமைத்துவம், ஒழுக்கம், தொலைநோக்கு சிந்தனை மற்றும் சேவை மனப்பான்மையை வளர்க்கும் வகையில் மாணவர் பேரவை செயல்பட வேண்டும் என விழாவில் வலியுறுத்தப்பட்டது. இவ்விழாவில் மாணவர்களுக்கான கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு கௌசானல் கல்லூரியின் அனைத்து மாணவ,மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். நிகழ்வின் இறுதியாக வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் V.கௌதமராஜ் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.
Toxic – 6ஆம் நாள் வசூலில் கடும் சரிவுயஷ் நடிப்பில் வெளியான Toxic: A Fairy Tale for Grown-Ups திரைப்ப...
நேபாளத்தில் வெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு திடீர் ...
ஆசிய விளையாட்டுப் போட்டி: இந்திய அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள்ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற...