சிவகங்கை, ஆகஸ்ட் 12;
சுதந்திர தினம் அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 15.08.2026 சுதந்திரதினத்தன்று காலை 11.00 மணியளவில் உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
அன்றைய கிராம சபைக் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 15.08.2026 சுதந்திரதினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு அவ்வூராட்சியில் சுதந்திரதினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், துாய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தொழிலாளர் வரவு-செலவு திட்டம் ஜீன் 30, 2026ம் தேதி வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதித்தல், 2026-2027 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தல், சிறுபாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல்,ஜல் ஜீவன் திட்டம், மற்றும் தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம் ஆகிய கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளது.
எனவே,15.08.2026 சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.