ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய பயிற்சியாளராக மீண்டும் VVS லக்ஷ்மண்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மண் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார். கௌதம் கம்பீர் ஓய்வு பெறுவதால் இந்த பொறுப்பு லக்ஷ்மணிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவருடன் சுனில் ஜோஷி, ஹ்ரிஷிகேஷ் கனிட்கர் மற்றும் சுபதீப் கோஷ் ஆகியோர் பயிற்சிக் குழுவில் இணைகின்றனர். இந்திய பெண்கள் அணிக்கு அமோல் முசும்தார் பயிற்சியாளராக செயல்படுகிறார்.
கடந்த 2022 ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள், இந்த முறையும் தங்கள் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் முனைப்புடன் களமிறங்குகின்றன.
இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் கிரிக்கெட் அணிகளுக்கான தங்குமிட வசதிகள் குறித்தும் விவாதம் எழுந்துள்ளது. அணிகளுக்கு ஹோட்டல் தங்குமிடம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் கிரிக்கெட் சங்க CEO தெரிவித்துள்ளார்.
Toxic – 6ஆம் நாள் வசூலில் கடும் சரிவுயஷ் நடிப்பில் வெளியான Toxic: A Fairy Tale for Grown-Ups திரைப்ப...
நேபாளத்தில் வெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு திடீர் ...
இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8%இந்தியாவின் முதல் காலாண்டு GDP வளர்ச்சி 7.8% ஆக உயர்ந்து, பொருளாதார நிப...