பணகுடி, ஆகஸ்ட் 13;
நெல்லை மாவட்டம், பணகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சங்கரலிங்கம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் கென்னடி முன்னிலை வகித்தார். இப்பள்ளியின் முதுகலை ஆசிரியர் திருமதி மேரி அனிற்றா வரவேற்புரை வழங்கினார். வரலாற்று துறை ஆசிரியர் சண்முகவேல் இக்கூட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினார். வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பள்ளி மாணவர்கள் அதிகமான பரிசுகளை வென்று வந்ததை பாராட்டி அந்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் த.ஜெயக்குமார் செய்திருந்தார்கள். மகிழ் முற்றம் சார்பாக ஜூலை மாதம் வெற்றி பெற்ற பாலை அணிக்கு சுழல் கோப்பை அணியினுடைய ஒருங்கிணைப்பாளர் முதுகலை ஆசிரியர் ம.மதன்குமார் பெற்றுக்கொள்ள பொறுப்பாளர் முதுகலை ஆசிரியை மேரி அனிற்றா வழங்கினார். திரளான பெற்றோர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் பள்ளியில் அன்றாடம் நடைபெறும் செயல்களையும் இனி என்னென்ன சிறப்புற்ற செயல்களை செய்யப் போகிறோம் என்ற நிகழ்வுகளையும் மாணவ செல்வங்களுக்கு 100% தேர்ச்சியும் அதிக மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் தலைமை ஆசிரியர் விரிவாக விளக்கினார். பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் கென்னடி அவர்களின் வேண்டுகோளை ஏற்று பள்ளியில் தூய்மை பணியாளரை நியமிக்க பெற்றோர்கள் தன்விருப்பப் பங்களிப்பு தொகை அளிக்க அனைத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் முடிவெடுக்கப்பட்டது. டிஎன்பிஎஸ்சி சிறப்பு வகுப்பு உருவாக்கப்பட்டதினுடைய பதாகை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. முதுகலை ஆங்கில ஆசிரியை திருமதி ஆக்னஸ் ரெத்தினம் நன்றியுரை வழங்கினார். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.