NEW தேனியில் 17 கைதிகள் பிரதான நுழைவுவாயில் வழியாக தப்பினர்: சிறைத்துறை விளக்கம்
தேனியில் 17 கைதிகள் தப்பியது எப்படி? என சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது. தேனி மாவட்ட சிறையில் வார்டனை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், டிரோன் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் பதற்றம் அதிகரித்துள்ளது. தேனி சிறையில் இருந்து தப்பியவர்களில் இதுவரை 13 கைதிகள் பிடிக்கப்பட்டுள்ளனர். 9 சிறைக் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரம் குறித்து சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது. அக்.26 இரவு 10 மணியளவில் ஒரு கைதிக்கு வலிப்பு வந்ததாக மற்ற கைதிகள் கூச்சலிட, ஒரு காவலர் அதனை உறுதி செய்ய உள்ளே சென்றுள்ளார். இதையடுத்து, அந்த பிளாக்கில் பாதுகாப்புப் பணியில் இருந்த இரண்டாம் நிலை சிறைக் காவலர் ஸ்டாலின் பிரபு, கைதியின் உடல்நிலையைப் பார்ப்பதற்காக உள்ளே சென்றார். அப்போது அவரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கைதிகள்,சிறையிலிருந்து தப்பிக்க முயன்றனர்.பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால், காவலர்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கைதிகள், சாவிகளைப் பறித்து, சிறையின் பிரதான நுழைவாயிலைத் திறந்து தப்பிச் சென்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ...
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று கலந்துரையாட...
சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ...