NEW செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சிறுமி மாயமான வழக்கில், சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 12ம் தேதி மாயமானார். பிறந்தநாள் கொண்டாடிவிட்டு கடந்த 11ம் தேதி இரவு தங்களுடன் தூங்கிய மகளை காணவில்லை என தாயார் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.எஸ்பி மதிவாணன் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியை தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டது. நீர்நிலைகள், காடு, குப்பைமேடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிறுமியை தேடினர். 600-க்கும் மேற்பட்ட செல்போன் பதிவுகள் மற்றும் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆகியவற்றை தனிப்படை போலீஸார் ஆய்வுக்கு உட்படுத்தினர்.தொடர்ந்து 10 நாட்களாக தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அறிவியல் பூர்வமான தடயங்கள் ஏதும் கிடைக்காததால் தனிப்படை போலீஸாரின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. சந்தேகத்தின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டும் துப்பு கிடைக்காமல் போலீஸார் திணறினர்.இந்நிலையில், சிறுமியை கண்டுபிடிப்பதில் மெத்தனமாக செயல்படுவதாகக் கூறி திமுக சார்பில் ஆலம்பூண்டி ஊராட்சியில் அக்டோபர் 22ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் உள்ளூர் காவல்துறையின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் சிபிசிஐடி விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டுமென திமுக ஏற்கெனவே வலியுறுத்தி இருந்தது.இதற்கிடையில் சிறுமி மாயமான வழக்கை அக்.21 இரவு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். இதை அடுத்து விழுப்புரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் நேற்று (அக்.22) ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பிறகு ஆலம் பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்திற்குச் சென்று சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்
கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு நன்றி தெர...
“தனது எதிர்மறை அரசியல் காரணமாகவே காங்கிரஸ் கட்சியால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது,” ...
மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலே தேசவிரோத முத்திரையா?’ என்று ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர...