மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ராஜினாமா
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சராக இருப்பவர் எல்.முருகன். தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்தவர்.2029 மக்களவைத் தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்தும் நோக்கத்தில் முழுநேர கட்சிப் பணியாற்ற அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.இதற்கு முன்பு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது கட்சிப்பணி ஆற்றிவரும் நிலையில், எல். முருகனும் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.ராஜினாமா குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு 5 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை எல். முருகன் எழுதியுள்ளார். அதில், மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எல். முருகன் பதிவிட்டுள்ளதாவது:''பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் பாரதத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் சேவையாற்றுவது என் வாழ்நாளின் மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.ஒரு தினக்கூலியின் மகனாக இருந்து மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று நாட்டிற்கு பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டது சிறந்த பாக்கியமாகக் கருதுகிறேன்.தற்போது நான் களப்பணிக்கு மீண்டும் திரும்பி, 2029 மக்களவைத் தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட விரும்புகிறேன். நாட்டின் நலனே முதன்மை. கட்சி அதற்கு அடுத்தது. இறுதியாகத்தான் எனது நலன்'' என எல். முருகன் பதிவிட்டுள்ளார்
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...