NEW மீண்டும் ஒரு டெண்டரை ரத்து செய்த தவெக அரசு
திமுக ஆட்சியில் போடப்பட்ட மற்றொரு டெண்டரை தமிழக வெற்றிக் கழக அரசு ரத்து செய்துள்ளது. தமிழக வெற்றிக்கழக அரசு அமைந்தது முதல் முந்தைய ஆட்சி காலங்களில் போடப்பட்ட பல்வேறு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் தமிழ்நாடு நகர்புற ஆய்வு நிறுவனத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்காக வெளியிடப்பட்ட டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் சார்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க ஆலோசனை சேவைகளை பெறுவதற்கு இந்த டெண்டர் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக இந்த டெண்டர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஏழு மாவட்டங்களில் தனியார் பங்களிப்புடன் சாலையோர வசதி மையங்களை அமைக்க கோரப்பட்டிருந்த டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இதுபோல சென்னை செய்யாறு தொழில்வழிச் சாலையை இணைக்கும் வகையில் 43 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழி சாலை அமைப்பதற்கான டெண்டரும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், மாமல்லபுரத்தில் 74 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற திட்டமிடல் பயிற்சி நிறுவனத்திற்கு புதிய வளாகம் அமைக்க திமுக ஆட்சியில் விடப்பட்ட டெண்டரும் ரத்து செய்யப்பட்டுள்ளது
மத்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலே தேசவிரோத முத்திரையா?’ என்று ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர...
நீர் மேலாண்மை, நில மேலாண்மை, ஆட்சி நிர்வாகம், கட்டடக்கலை,போர்த்திறன் எனப் பலவற்றிலும் தமிழர் பெருமைய...
சிவகங்கை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சுள்ளான் மதன் என்பவர் வெட்டிப் படுகொல...