சிஜேபி முக்கிய நிர்வாகிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த இருந்த நிலையில், சிஜேபியின் நிறுவனர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்துக்கு தடை விதித்துள்ள டெல்லி போலீஸ், தடையை மீறி போராட முயல்பவர்களை பல்வேறு இடங்களில் வைத்து கைது செய்து வருகிறது.சிஜேபி நிறுவனத் தலைவர் அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்கள் சவுரவ் தாஸ், ஆசுதோஷ் ரங்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தை வந்தடைந்ததும், விமானத்துக்குள் சென்ற டெல்லி போலீஸார் அவர்களை விமானத்துக்குள் வைத்தே கைது செய்தனர்.இதேபோல், சிஜேபியின் சட்டக் குழு தலைவர் ரத்னா சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார். ஜந்தர் மந்தரை நோக்கி சக வழக்கறிஞர்கள் மூவருடன் அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது காரை வழிமறித்த போலீஸார், அவர்கள் நால்வரையும் கைது செய்துள்ளனர்.சிஜேபியின் போராட்ட அறிவிப்பை அடுத்து டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 15,000 போலீஸாரும், மத்திய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 23,000 வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 38,000 வீரர்கள் டெல்லியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்கிறார்களா என்பதை அவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதற்காக முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன. போராட்டக்காரர்கள் பயணிப்பது தெரிய வந்தால் அவர்களை போலீஸார் உடனடியாக கைது செய்து தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.இதனிடையே, சிஜேபியின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் அந்த அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது சர்வாதிகார அணுகுமுறை என்றும் அவசரநிலைக் காலத்தை நினைவூட்டுகிறது என்றும் சிஜேபி விமர்சித்துள்ளது
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...