10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (அக்.14) அறிவித்தார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்ததாவது: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3-ல் தொடங்கி மார்ச் 29 வரை நடைபெறுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே-7ல் வெளியிடப்படுகிறது.பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி பிப்.26-ம் தேதிக்குள் 10-ம் வகுப்புக்கான செயல்முறைத் தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 17-ல் தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.20-ல் வெளியிடப்படுகிறது.பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை தமிழ்: 17.03.2027ஆங்கிலம்: 25.03.2027கணிதம்: 31.03.2027அறிவியல்: 05.04.2027சமூக அறிவியல்: 09.04.2027விருப்பப் பாடம்: 12.04.2027 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணைதமிழ் 03.03.2027ஆங்கிலம்: 08.03.2027 வேதியியல்: 12.03.2027உயிரியல்: 19.03.2027இயற்பியல்: 23.03.2027கணிதம்: 29.03.2027கணக்குப் பதிவியல்: 12.03.2027கணினி அறிவியல்: 15.03.2027வரலாறு: 19.03.2027தாவரவியல்: 19.03.2027பொருளியல்: 23.03.2027விலங்கியல்: 29.03.2027 தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது என்று அமைச்சர் அறிவித்தார்.10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.20-ம், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும் வெளியாகிறது
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...