தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவியர்கள் சந்திப்பு நிகழ்வு 03.10.2026 அன்று காலை 9.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது பள்ளிப் பருவ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ஆசிரியர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் திரு.A.S.G.தர்மராஜன், உபதலைவர் திரு.A.S.ஜீவகன், பொதுச்செயலாளர் திரு.M.M.ஆனந்தவேல், பொருளாளர் திரு.B.ராமச்சந்திரன் மற்றும் பள்ளியின் செயலாளர் திரு.C.காளிராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், தற்போது பயிலும் மாணவியருக்கு கல்வி, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் தொடர்பான பயனுள்ள ஆலோசனைகளையும் முன்னாள் மாணவியர்கள் வழங்கினர். இச்சந்திப்பு ஆசிரியர்கள். முன்னாள் மாணவியர்கள் மற்றும் தற்போதைய மாணவியர்களிடையே நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.
இவ்விழாவின் ஏற்பாடுகளை திருமதி.சொர்ணா அவர்கள் ஏற்பாடு செய்தார். நிகழ்ச்சியின் நிறைவில், முன்னாள் மாணவியர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. இனிமையான பள்ளி நினைவுகளை மீட்டெடுத்த இச்சந்திப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் பயனுள்ள அனுபவமாக அமைந்ததாக கலந்து கொண்ட முன்னாள் மாணவிகள் தெரிவித்தனர்.