தமிழ்நாடு அரசின் சோலார் மின் மானியத் திட்டத்தை வரவேற்று, கோயம்புத்தூர் பத்திரிகையாளர்கள் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு சோலார் பிசினஸ் அசோசியேஷன் தலைவர் ஈரோடு கந்தசாமி தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் அளித்த பேட்டியில்; மத்திய அரசின் ₹78,000 சூரிய மின் மானியத்துடன், தமிழக அரசின் கூடுதல் ₹22,000 மானியத்தையும் இணைத்து, தகுதியுள்ள வீட்டு மின் நுகர்வோருக்கு மொத்தம் ₹1 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு சோலார் பிசினஸ் அசோசியேஷன் சார்பில் மனமார வரவேற்கிறோம்.
பொதுமக்கள் அதிக அளவில் மேற்கூரை சூரிய மின் நிலையங்களை அமைக்கவும், சூரிய மின்சக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும், பசுமை எரிசக்தி வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும்.
இத்தகைய பயனுள்ள திட்டத்தை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கும், மாண்புமிகு தமிழக மின்சாரத் துறை அமைச்சர் C.T.R.நிர்மல்குமார் அவர்களுக்கும், தமிழ்நாடு சோலார் பிசினஸ் அசோசியேஷன் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.
சங்கத்தின் துணைத் தலைவர் பிரபாகர், சங்கத்தின் செயலாளர் செல்வகுமார், சங்கத்தின் இணைச் செயலாளர்கள் சுஜய் கங்காதரன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.