செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அழகப்பா பல்கலைக்கழக அளவில் இருபாலர் கால்பந்து போட்டி
இராமநாதபுரம், செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளை செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இப்போட்டி நிகழ்வில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குனர் நாகராஜன், புறகல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயபால் , உடற்கல்வி ஆசிரியர் காளிதாஸ் கலந்து கொண்டார்கள். ஆண்கள் கால்பந்தாட்ட பிரிவில் 13 கல்லூரிகளும் பெண்கள் கால்பந்தாட்ட பிரிவில் 9 கல்லூரிகளும் இடம்பெற்றன. ஆண்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி முதல் இடத்தையும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் டாக்டர் ஜாகிர் உசேன் கலை அறிவியல் கல்லூரி மூன்றாம் இடத்தையும் செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றார்கள். பெண்கள் பிரிவில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி முதலிடமும், அழகப்பா அரசு கலைக் கல்லூரி இரண்டாம் இடத்தையும், டாக்டர் ஜாகீர் உசேன் கலைக்கல்லூரி மூன்றாம் இடத்தில் தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றார்கள். பரிசுக் கோப்பையினை கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் வழங்கினார். போட்டிகளைப் பிற கல்லூரி உடற் கல்வி இயக்குனர்களும், செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்களான சவேரியர் மற்றும் எப்சிமேரி ஆகியோர் சிறப்புடன் நடத்தினார்கள். போட்டியில் வெற்றி அடைந்த கல்லூரி மாணவர்களுக்கு செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் ராஜாத்தி அப்துல்லா மற்றும் செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். போட்டிகள் சிறப்புற நடப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...