ரோடு மாவட்டம் பெருந்துறையில் இயங்கிவரும் சாகர் இண்டர்நேஷனல் பள்ளியில் 3ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் திறனையும், படைப்பாற்றலையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் வெளிப்படுத்தும் வகையில் “SPECTRUM 26” - SCIENCE IN DAILY LIFE என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
கண்காட்சியின்தொடக்க விழாவில் பள்ளி தாளாளர் மற்றும் செயலாளர் திரு. சி. செளந்திரராசன் குத்துவிளக்கேற்றிநிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய பல்வேறு அறிவியல் மாதிரிகள் மற்றும் செயல் விளக்கப் படைப்புகளை ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மொத்தம் 265 மாதிரிகள் காட்சிப்படுத்தினர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீர்மேலாண்மை, வேளாண்மை, சுகாதாரம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்றிருந்தன.
கண்காட்சியின் முதல்நாளில் நந்தா, கொங்கு, அல்அமீன் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்து மாணவர்களின் படைப்புகளை நேரில் பார்வையிட்டு, அவற்றின் செயல்பாடு, புதுமை மற்றும் மாணவர்களின் விளக்கத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்து மதிப்பெண்கள் வழங்கினர். அதன் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
கண்காட்சியின் இரண்டாம் நாளில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்கள் குழந்தைகள் உருவாக்கிய அறிவியல் படைப்புகளைக் கண்டு மகிழ்ந்தனர். மாணவர்கள் தங்களது படைப்புகளின் சிறப்புகளையும் செயல்பாடுகளையும் பெற்றோருக்கு ஆர்வத்துடன் விளக்கினர். பெற்றோர்கள் மாணவர்களின் முயற்சியையும் திறமையையும் பாராட்டினர்.
பிற்பகலில் பரிசு வழங்கும் விழா நடைப்பெற்றது. சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பிரிவுகளில் உள்ள சிறந்த படைப்புகளுக்கும்அவற்றை உருவாக்கிய மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இக்கண்காட்சி மாணவர்களிடையே அறிவியல் சிந்தனை, புதுமை, படைப்பாற்றல், ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்கும் வகையில் சிறப்பாக அமைந்தது. மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்த அறிவியல் கண்காட்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.