சேலம் அஸ்தம்பட்டி பச்சை உடையார் காடு வழிகாட்டி விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா!
சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி மத்திய சிறை பின்புறம் பச்சை உடையார் தெருவில் ஸ்ரீ வழிகாட்டி விநாயகர் நண்பர்கள் குழு சார்பில் 14ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக திங்கட்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காலை விநாயகருக்கு ஓம குண்டம் வளர்க்கப்பட்டு, பல்வேறு அபிஷேக மந்திரங்கள் கூறி, சிறப்பு அபிஷேக திரவியங்களால் அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்து, எருக்கம் பூ மாலை அணிவித்து, விநாயகருக்கு மிகவும் பிடித்த நைவேத்திய பிரசாதங்களைப் படைத்து மகாதீபம் ஏற்றப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ வழிகாட்டி விநாயகரை தரிசித்து அருள் பெற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோவில் நிர்வாக குழு சார்பில் மகா பிரசாதம் வழங்கப்பட்டது.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...