சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு இளங்கலை சட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சுமார் 380க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு முனைவர். பெ.முருகன் மற்றும் நீதியரசர் ச.கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர். எஸ்.எஸ்.பி.தார்வேஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.
விழாவில் சேலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி என்.பாரதிராஜன், குற்றவியல் நீதிபதி ஆர்.அப்துல் சலாம், உரிமையியல் சார்பு நீதிபதி ஆர்.மனோகரன், குற்றவியல் நீதிபதி முத்துகிருஷ்ணன் முரளிதாஸ், குற்றவியல் நீதிபதி எஸ்.பூவராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் தலைமையுரை ஆற்றிய சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் தலைவர் சரவணன் தனபாலன் இந்த கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் உயர்நீதிமன்ற நீதியரசர்களாக வேண்டும் என்ற நிறுவனர் பேரா.இரா.வை தனபாலன் அவர்களின் கனவு இன்று நனவாகியுள்ளது. குறிப்பாக இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 7 பேர் இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களாகியுள்ளதை குறிப்பிட்டு, அவர்களுள் இரு நீதியரசர்கள் இன்று இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது என்று தனது உரையை வழங்கினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய மாண்புமிகு நீதியரசர் எஸ்.கார்த்திகேயன் சிறப்புரையாற்றினார்.
மேலும் இக்கல்லூரியின் மாணவராக இருந்தபோது ஒழுக்கத்துடன் கூடிய சட்டக்கல்வி போதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து பேசிய நீதியரசர் அவர்கள் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றார். தொடர்ந்து பட்டமளிப்பு விழாப் பேருரை ஆற்றிய மாண்புமிகு நீதியரசர் பி.முருகன் அவர்கள், சாதாரண விவசாய குடும்பத்திலிருந்து இச்சட்டக்கல்லூரியின் மாணவனாக தான் நுழைந்த போது, பி.எல். பட்டம் பெற்றால் மட்டும் போதும் என்ற குறிக்கோளுடன் வந்ததாகவும் இக்கல்லுாரியின் நிறுவனர் பேரா.இரா.வை தனபாலன் அவர்களால் தனக்கு இக்கல்லூரியில் கிடைத்த ஒழுக்கத்துடனான சட்டக்கல்வி தனது வளர்ச்சிக்கான அடித்தளம் என்று கூறி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பட்டதாரிகளுக்கு சென்ட்ரல் சட்டக்கல்லுாரியின் தலைவர் சரவணன் தனபாலன் அவர்கள் உறுதிமொழி செய்து வைத்தார். விழாவில் சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் முதல்வர் முனைவர் பேகம் பாத்திமா, கல்லூரியின் தலைமை நிர்வாக அதிகாரி மாணிக்கம், துணை முதல்வர் சாந்தகுமாரி, துறைத் தலைவர்கள். சத்தியப்பிரியா, அன்சிர்ப்பா, பாஸ்கரன், கர்ணன் ஆகியோர் உடனிருந்தனர். விழாவின் வரவேற்புரையை உதவிப் பேராசிரியர் க.கர்ணன் வழங்கினார். உதவிப் பேராசிரியை சத்தியப்பிரியா நன்றியுரை வழங்கினார்.