முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு
முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்துள்ளார். அங்கு ராகுலுக்கு மதிய விருந்து அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இன்று பிற்பகல் சென்னை வந்தார்.தில்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை விமான நிலையம் வந்த அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூா் உள்ளிட்டோா் வரவேற்றனர்.அங்கிருந்து ராகுல் காந்தி, முதல்வர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் சார்பில் மதிய விருந்து அளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விருந்துடன் இருவரும் கூட்டணி குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேசுவதாகத் தெரிகிறது.முதல்வர் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு, தில்லியில் ராகுல் காந்தி வீட்டுக்கு முதல்வா் விஜய் சென்றாா். அதன்பின் இருவரும் நேரில் சந்தித்துப் பேசவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி, சென்னை தீவுத்திடலில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறும் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் தில்லி திரும்புகிறார்
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...