தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் பொறுப்பேற்றார்
தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (அக். 15) பொறுப்பேற்றுக் கொண்டார்.தமிழக ஆளுநராக இருந்த ஆா்.என். ரவி மேற்கு வங்க ஆளுநராக கடந்த மாா்ச் மாதம் மாற்றப்பட்டாா். இதையடுத்து கேரள ஆளுநராக இருந்த ஆா்.வி.ஆா்லேகருக்கு தமிழகத்தின் ஆளுநராகக் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில், அவரை தமிழகத்தின் முழுநேர ஆளுநராக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு நியமித்து உத்தரவிட்டுள்ளார்.தொடர்ந்து ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.இதையடுத்து தமிழகத்தின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. ஆர்லேகர் சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்நிகழ்வின்போது, ஆளுநரின் செயலாளர் சஜ்ஜன்சிங் ஆர். சவான் மற்றும் பிற அதிகாரிகளும் உடனிருந்தனர். அவருக்கு காவல்துறை சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...