தூத்துக்குடி மாவட்டம்,
சாயர்புரம் போப் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அரசின் ஒரு கோடி பனை விதைகள் நடும் திட்டம் சார்பாக போப் கல்லூரி மாணவர்கள் சாயர்புரம் அருகே உள்ள திருப்பணி செட்டிகுளம் பகுதியை தேர்ந்தெடுத்து பனைவிதைகளை நட்டினார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சி டாக்டர் ஜி யு போப் கல்லூரி முதல்வர் பி. சாந்தினி கிரேஸ் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சாயர்புரம் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் வரவேற்புரை நிகழ்த்தியதோடு பனைமரம் நடுதலின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். சிறப்பு விருந்தினர்களாக சாயர்புரம் நகர பஞ்சாயத்து கவுன்சிலர் ஜெயக்குமார், ஜெபத்தங்கம் பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர். செட்டிக்குளம் ஊரின் குளக் கரையோரத்தில் பனை விதைகள் நடப்பட்டது. விழா ஏற்பாடுகளை கல்லூரி செயலர் ஜெபர்சன் சாமுவேல்ராஜ், முதல்வர். சாந்தினி கிரேஸ், துணை முதல்வர் ஜெபசிங் கோரேஸ், நூலகர் முத்தரசன், உடற்கல்வி இயக்குநர் ஜோன்ஸ் ராஜன், உதவிப்பேராசிரியர்கள் பொன் சாம், மரியஜெயோன் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தனசீலி, அட்லின் லிடியா ஜோஸ்பின், பியூலா, D.ரமணி ஆகியோர் செய்திருந்தனர். இதில் 50 மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப் பணித்திட்ட உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.