தாதா இமேஜ் வேண்டாம்; இனி நான் வியாபாரி: ரூட்டை மாற்றிய ராக்கெட் ராஜா
தமிழகத்தில் பனங்காட்டுப்படை கட்சியின் தலைவராக பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் ராக்கெட் ராஜா தற்போது தான் லாரி தொழில் தொடங்கியுள்ளதாகவும், இனி தன்னை ஒரு வியாபாரி என்றே மக்கள் அழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏ பிளஸ் (A-plus) குற்ற பதிவேட்டு பட்டியலிலிருந்த ஆறுமுக பாண்டியன் என்கிற ராக்கெட் ராஜாவுக்கு எதிரான பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடியான நிலையில் ஒரே ஒரு கொலை வழக்கு மட்டும் விசாரணை நடந்து வருகிறது. ஆனால் அவர் புதிதாக லாரி தொழில் ஈடுபட்டு வருகிறார். நெல்லை மாவட்டம் ஆனைகுடியை பூர்வீகமாக கொண்ட ராக்கெட் ராஜா பனங்காட்டு படைக் கட்சியின் தலைவராக உள்ளார். இவர் தற்போது ஆர்.ஆர். டிராவல்ஸ் என்ற பெயரில் லாரி தொழில் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை கிண்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ராக்கெட் ராஜா, என் பழைய வரலாறுகளை மறந்துவிடுங்கள். இனி நான் வியாபாரி. என்னை வியாபாரியாக பாருங்கள் என்று கூறியுள்ளார். ஒரு சிறு வியாபாரி பாதிக்கப்பட்டாலும் எங்களுடைய ஆக்ஷன் கண்டிப்பா இருக்கும். அதை கண்டிப்பாக எந்த நேரத்திலும் நான் எந்த தூரத்தில் வளர்ந்துபோனாலும் வியாபாரிகளுக்
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...