தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கிடையேயான உள் விளையாட்டரங்கப் போட்டிகள்
கல்லூரியின் K3 கலையரங்கில் இறைவணக்கத்துடன தொடங்கியது. கல்லூரியின் செயலாளர் திரு.V.M.K.K.ராதாகிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
இப்போட்டிகளை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தியது. இதில் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட 8 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த 65 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர பலகலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், உடற்கல்வித் துறை இயக்குநருமான முனைவர் A.ராஜம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர்தம் உரையில் சீருடை பணியாளர் தேர்வு, சார்பு ஆய்வாளர் மற்றும் இந்திய காவல் பணி (IPS) அதிகாரி தேர்வு ஆகிய தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு விளையாட்டுப் போட்டிகளின் மூலம் பெறப்படும் படிவம்-3 சான்றிதழ் உதவிகரமாக இருக்கும் என்று எடுத்துரைத்தார். மேலும், மாணவிகள் தினசரி உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, உரிய நேரத்தில் அவற்றைப் பயன்படுத்தி பல்வேறு சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கடந்த 15 வருடக் காலங்களில் கபாடி மற்றும் உள்விளையாட்டரங்கப் போட்டிகளில் தொடர்ந்து பல்கலைக்கழகம் மற்றும் நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வெற்றிப்பெற்று வருகின்றன என கூறினார். மேலும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத் தேவையான உடற்பயிற்சிகளைத் தினந்தோறும் மேற்கொண்டு, உடல் நலத்தையும் அதன் வழியாக உயிர் நலத்தையும் பேண வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
எட்டு கல்லூரிகளைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சதுரங்கப் போட்டியில் நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் முதல் நான்கு இடங்களையும், மேசைப்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தையும்,
இறகுபந்து போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றனர்.
நிறைவாக நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இணைச்செயலாளர் திரு.K.வன்னியராஜன் நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் S.சித்ரா மற்றும் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் A.ராஜம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
இவற்றில் எட்டு கல்லூரிகளுக்கு இடையே நடந்த உள்விளையாட்டரங்க போட்டிகளில் நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் அணி ஒட்டுமொத்த சாம்பியன் விருதைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர். நிறைவாக கல்லூரியின் விளையாட்டுத்துறை தலைவர் R.ரத்னா அவர்கள் நன்றியுரை கூற நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.