தென் தமிழகத்தில் துல்லியமான மற்றும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளில் மற்றொரு புதிய சகாபதத்தை உருவாக்கும் வகையில், மதுரை வடமலையான் மருத்துவமனை அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது இப்புதிய தொழில்நுட்பம், மேம்பட்ட மற்றும் எளிய முறையில் உலகப் புகழ்பெற்ற ரோபோடிக் சிகிச்சையை மதுரை மற்றும் சுற்றியுள்ள பொதுமக்களுக்கு மிக அருகில் கொண்டுசேர்க்கிறது.
இதன் துவக்கவிழா வடமலையான் மருத்துவமனையில் நடைபெற்றது மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குநர் சந்திரா புகழகிரி குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்தார்.மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வ. புகழகிரி வரவேற்றுப் பேசினார்,அப்போது பேசுகையில், "கடந்த 70 ஆண்டுகளாக மருத்துவுத் துறையில் பல்வேறு புதுமைகளையும், உயர்தா சேவைகளையும் வழங்கிவரும் வடமலையான் மருத்துவமனை
தற்போது எஸ்எஸ்ஐ ரோபோடிக் அறுவைசிகிச்சை முறையை அறிமுகப்படுத்துகிறது. மேம்பட்ட எளிய மற்றும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய இச்சிகிச்சை மனிதநேயத்துடன் கூடிய நவீன மருத்துவத்தின் மிக முக்கிய மைல்கல்லாகும்" என்றார்.
ஹைதராபாத் பரீத்தி சிறுநீரக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிறுநீர்கவியல் துறைத் தலைவர் Vaddichandramohan சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு. இந்த அதிநவீன ரோபோடிக் அறுவைசிகிச்சை முறையைத் துவக்கிவைத்து அதன் சிறப்பம்சங்கள் மற்றும் மருத்துவ நன்மைகள் குறித்து விளக்கவுரையாற்றினார் அதைத்தொடர்ந்து, எஸ்எஸ்
இன்னோவேஷன்ஸ் (துணைத் தலைவர் சீனிவாசரெட்டி வாழ்த்திப் பேசினார். இறுதியாக, மருத்துவ சேவைகள் இயக்குநர் எஸ்.சுந்தரராஜன் நன்றி கூறினார். நிகழ்வில் இதயம் மற்றும் நெஞ்சக அறுவைசிகிச்சை நிபுணர் பி.பாபு, மருத்துவ இயக்குநர் வி.பாப்புநாதன், புற்றுநோய் அறுவைசிகிச்சை நிபுணர் எஸ்.அழகுகணேஷ், இரைப்பை மற்றும் குடல் அறுவைசிகிச்சை நிபுணர் என் ஆர்.வெங்கடேஷ், . சிறுநீரக மருத்துவர்கள் ஜே.சதீஷ்கின்னி, விவேக், மகப்பேறு மருத்துவர்கள் எஸ்.பாலசரஸ்வதி, டாக்டர் பாரதி டாக்டர் டி.கார்த்திகா மற்றும் பொது அறுவைசிகிச்சை நிபுணர் அழகுமுத்து மற்றும்
மருத்துவர்கள், பணியாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்