மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா
தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களுள் ஒன்றாகவும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்கும் உலகப் புகழ்பெற்றது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான வரலாறு மட்டுமின்றி, தமிழ்மொழி, சங்கம், கலை மற்றும் பண்பாட்டின் தொன்மையான மையமாகத் திகழும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், 2009 ஆம் ஆண்டு குடமுழுக்கிற்குப் பின்னர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, புனரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. இதனையொட்டி மதுரை மாநகர் விழாக் கோலம் பூண்டு, மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.
திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் 5 லட்சம் டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் முழுவதும் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நேற்று (செப். 16) காலை 6 மணிக்குள் தட்சிணாமூர்த்தி, துர்க்கை, லெட்சுமி, பத்ரகாளி, 63 நாயன்மார்கள் மற்றும் கொடி மரங்கள் உள்பட 414 பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கை முன்னிட்டு கோயிலில் உள்ள 4 கோபுரங்கள் உள்பட 12 கோபுரங்களுக்கும் நிலை மாலைகள் சாற்றப்பட்டன.
குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கின. இதற்காக அமைக்கப்பட்ட 183 யாக குண்டங்களில், செப். 11-ஆம் தேதி முதல் சிறப்பு வேள்விகள் நடைபெற்று வந்தன. திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னிட்டு செப். 11 முதல் 17ம் தேதி வரை நடைபெற்று வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு 12-ஆம் கால யாகபூஜை நிறைவடைந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து காலை 5.45 மணிக்கு புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்காக வடக்கு ஆடி வீதியில் 184 யாக குண்டங்கள் மற்றும் 56 யாகசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அம்மனுக்கு 33 யாக குண்டங்களும், சுவாமிக்கு 23 யாக குண்டங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
யாகசாலை பூஜைகள் மற்றும் திருக்குட நன்னீராட்டு விழாவில் 300-க்கும் மேற்பட்ட பட்டர்கள் பங்கேற்று பூஜைகளை முன்நின்று நடத்தினர்.
தமிழ் ஓதுவார்களின் வேத மந்திரங்களும், மேளதாள வாத்தியங்களும் முழங்க காலை 7.40 மணிக்கு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கு புனித நீர் உற்றப்பட்டது. திருக்கோயிலில் உள்ள 12 கோபுரங்களில் உள்ள கலசங்களுக்கும் புனித நீர் உற்றப்பட்டு, நன்னீராட்டு விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ராஜ கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள், தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோயில் வளாகம், ஆடி, சித்திரை வீதிகளில் குழுமியிருந்த பக்தர்களுக்கு குடமுழுக்கு புனித நீர் ஸ்பிரிங்க்ளர் மூலம் தெளிக்கப்பட்டது.
அப்போது, கருடன் வானில் வட்டமிட பக்தர்களின் ‘அரோகரா’... கோஷத்தால் விண்ணதிர்ந்தது. ராஜகோபுரங்களைத் தொடர்ந்து அன்னை மீனாட்சி, சுந்தரேசுவரர் சன்னதிகளுக்கும் புனித நீர் உற்றப்பட்டது.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...