இராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை,
கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலத் துறை சார்பில் “இலக்கிய மன்ற தொடக்க விழா மற்றும் அதரியன் கௌசானல் நினைவு சொற்பொழிவு 2026–2027” நிகழ்ச்சி 16.09.2026 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு கல்லூரியின் கருத்தரங்க அறையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு தலைப்பு “The Art of Effective Communication with AI” – “செயற்கை நுண்ணறிவுடன் பயனுள்ள தொடர்பாடல் கலையின் சிறப்பு” என்பதாகும். “Connect, communicate, and create – discover the art of communicating with AI” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி V.தானிஷியா, (B.A. English) மாணவியின் இறைவணக்கத்துடன் தொடங்கியது. தொடர்ந்து D. பவித்ரா, (II M.A. English) மாணவி வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் Rev. Bro. Dr. L. சூசை நாதன் SHJ மற்றும் முதல்வர் Rev. Bro. Dr. T. அருள்ராஜா SHJ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை மற்றும் வாழ்த்துகளை வழங்கினர்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக Dr. S. செந்தில் முருகன் (PG & Research Department of English, Government Arts College), பரமக்குடி, அவர்கள் கலந்து கொண்டு “The Art of Effective Communication with AI” என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு வழங்கினார்.
அவர் தனது உரையில், இன்றைய டிஜிட்டல் காலத்தில் பயனுள்ள தொடர்பாடலின் முக்கியத்துவம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல், படைப்பாற்றல், தொடர்பாடல் மற்றும் தொழில்முறை வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். மேலும், AI கருவிகளை பொறுப்புடனும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்துவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, சிறப்பு விருந்தினரின் கருத்துகளைக் கேட்டறிந்தனர். இந்நிகழ்வு மாணவர்களின் தொடர்பாடல் திறன், இலக்கிய ஆர்வம் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.
இறுதியாக எல். மோனிஷா (III B.A. English) மாணவி நன்றியுரை வழங்கினார்.
ஆங்கிலத் துறையினரின் ஒருங்கிணைப்பில் நிகழ்ச்சி சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நிறைவு பெற்றது.