சுதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நவீன லாரிங்காலஜி கிளினிக் துவக்க விழா
ஈரோடு சுதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட நவீன லாரிங்காலஜி கிளினிக் துவக்க விழா நடைபெற்றது.
ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள சுதா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மேம்படுத்தப்பட்ட நவீன லாரிங்காலஜி கிளினிக் மற்றும் புதிய பரிசோதனை சேவைகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு சுதா மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குநர் டாக்டர் கே. சுதாகர் தலைமை தாங்கினார். ஈரோடு பைரவர் பீடத்தின் ஸ்ரீ விஜய் சுவாமிஜி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், முதன்மை சிறப்பு அழைப்பாளராக ஈரோடு பிவிபி பள்ளி மற்றும் சி எஸ் அகாடமியின் தாளாளரும், காது, மூக்கு, தொண்டை நிபுணருமான டாக்டர் எல்.எம்.ராமகிருஷ்ணன், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு வேளாளர் எஜுகேஷனல் டிரஸ்ட் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில், லாரிங்காலஜி(குரல், விழுங்குதல் மற்றும் மூச்சுக்குழாய் பிரச்சனைகள்) சிகிச்சைக்கான பல புதிய அதிநவீன பரிசோதனை சேவைகளான(அட்வான்ஸ்டு டயக்னாஸ்டிக் சர்வீஸஸ்) குரல், விழுங்குதல் மற்றும் மூச்சுக்குழாய் கிளினிக், உலகின் முதல் பரிசோதனை சாதனமான போர்-டிகிரி ஆங்குலேஷன் நாசோபாரிங் கோலாரிங்கோஸ்கோப், வீடியோ ஸ்ட்ரோபோஸ்கோபி, நேரோ பேண்ட் இமேஜிங் போன்ற சேவைகள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டன. முன்னதாக ‘நவீன லாரிங்காலஜி’ என்ற தலைப்பில் வேலூர் சிஎம்சி இஎன்டி துறை தலைவரும், பேராசிரியையுமான டாக்டர் சுமா சூசன் மேத்யூஸ், ‘மேம்படுத்தப்பட்ட குரல் மற்றும் விழுங்குதல் மையத்தின் தேவை’ என்ற தலைப்பில் சுதா மருத்துவமனையின் லாரிங்காலஜிஸ்ட் தமிழ்நாட்டின் முதல் பயிற்சி பெற்ற குரல்வளை மற்றும் தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.பி.கவின் குமார் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், ஏராளமான மருத்துவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...