பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறார் ஞானேஷ் குமார் - கார்கே குற்றச்சாட்டு.
புதுடெல்லி: பாஜக ஆட்டி வைக்கும் கைப்பாவையாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டு வருகிறார் என்று மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் நடவடிக்கைகள் தன்னிச்சையானவை மற்றும் தவறானவை என்று சக தேர்தல் ஆணையர்கள் இருவரே விமர்சனம் செய்துள்ளனர்.
ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படும் வகையில்தான் தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகள் இருந்தன. அது இப்போது நாடு முழுவதும் தெரிந்த விஷயமாகி விட்டது. அவர் பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டுள்ளார். இத்தகைய சூழலில், அவர் பதவியில் நீடிக்க தகுதியில்லை; அவரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
காங்கிரஸ் சார்பில் 5 முக்கிய கோரிக்கைகள் தேர்தல் ஆணையத்தின் முன் வைக்கப்படுகின்றன. முதலாவதாக வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்கள் தொடர்பான தரவுகளையும் பகிரங்கமாகப் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
இரண்டாவது, வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்க வேண்டும். மூன்றாவது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வாக்காளர் பட்டியலை எளிய வடிவில், உரிய நேரத்தில் வழங்க வேண்டும்.
நான்காவது, தீவிரமான முறைகேடுகள் கண்டறியப்படும் இடங்களில், குறிப்பிட்ட காலவரையறைக்குள் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். இறுதியாக, தகவல் மறைக்கப்படுகிறது என்ற எண்ணம் யாருக்கும் ஏற்படாத வண்ணம் தேர்தல் நடைமுறைகளை முற்றிலும் வெளிப்படையானதாக மாற்ற வேண்டும்.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...