ஈரோடு ஜவுளி வார சந்தையில் மொத்த வியாபாரம் விறுவிறுப்பு: நூல் விலை ஏற்றதால் சில்லரை விற்பனை மந்தம்
ஈரோடு ஜவுளி வார சந்தை ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற இந்த ஜவுளி சந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளி மாநில வியாபாரிகள் வந்து மொத்தமாக துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுகுறு வியாபாரிகள் அதிக அளவில் வந்து துணிகளை வாங்கி செல்வார்கள். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் ஈரோடு ஜவுளி சந்தையில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஜவுளி சந்தை கூடியது எப்போதும் மந்தமாக இருக்கும் மொத்த வியாபாரம் இந்த வாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது கேரளா ஆந்திரா கர்நாடகாவில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் வந்திருந்து துணிகளை கொள்முதல் செய்து சென்றனர். எனவே இந்த வாரம் மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது .ஆனால் அதே சமயம் நூல் விலை ஏற்றம், கூலி உயர்வு, சாயப்பட்டறை பிரச்சனை காரணமாக துணிகள் விலை கடந்த வாரத்தை விட அதிகரித்து காணப்பட்டது ஒரு நைட்டிக்கு 30 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனையானது. இதேபோல் லுங்கி துண்டுக்கும் 20 ரூபாய் வரை விலை அதிகரித்து விற்பனையானது . இதன் காரணமாக சில்லரை விற்பனை இந்த வாரம் மந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது,
இந்த வாரம் சில்லரை விற்பனையை விட மொத்த விற்பனை அதிகரித்து காணப்பட்டது வெளி மாநில ஆர்டர்கள் ஓரளவுக்கு வந்திருந்தது. இந்த வாரம் மொத்த வியாபாரம் 40 சதவீதம் வரை நடைபெற்றது. ஆனால் சில்லரை வியாபாரம் 20 சதவீதம் வரை மட்டுமே நடைபெற்றது . அடுத்த வாரம் ஆயுத பூஜை அதை தொடர்ந்து தீபாவளி பண்டிகை வர உள்ளதால் இனி வரும் காலங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...