யு.பி.ஐ பரிவர்த்தனை கட்டணத்திற்கு எதிராக ஈரோடு மாவட்டம் முழுவதும் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
யு பி ஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் ஒருநாள் பணமில்லா பரிவர்த்தனை புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது.
பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக, ஈரோட்டில் மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமையில், மாவட்ட பேரமைப்பு அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டப் பொருளாளர் உதயம் செல்வம், கோவை மண்டல இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் சாதிக் பாட்சா மாவட்டத் துணைத் தலைவர் நெல்லை ராஜா மாவட்டத் துணைச் செயலாளர் மாதேஸ்வரன் மாநகர இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் உள்ளிட்ட மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகள், மாநகரில் உள்ள இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வணிகர்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இந்தப் போராட்டங்களின் மூலம் யு பி ஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிப்பதால் சிறு, குறு வணிகர்களுக்கு ஏற்படக்கூடிய கூடுதல் செலவினங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பொருளாதாரச் சுமைகள் குறித்து வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும், வணிகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சட்டைப்பைகளில் எதிர்ப்பு வாசகங்கள் அச்சிடப்பட்ட கருப்பு பேட்ஜ்களை அணிந்தும், தங்களது கடைகளில் எதிர்ப்பு வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகளை ஒட்டியும் போராட்டத்தில் பங்கேற்றனர்.டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் எளிமையாகவும், வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூடுதல் செலவுச் சுமையை ஏற்படுத்தாத வகையிலும் தொடர வேண்டும் என்றும், யு பி ஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் முடிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்றும் இப்போராட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...