சேலத்தில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முப்பெரும் விழா சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் தேமுதிக மாநில பொருளாளரும், முன்னாள் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான அழகாபுரம் மோகன்ராஜ் மற்றும் தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். தேமுதிக 19ம் ஆண்டு தொடக்க விழா, புரட்சிக் கலைஞர் கேப்டன் தேமுதிக நிறுவனர் திரு விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தேமுதிக பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் வழங்கி சிறப்பித்தார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...