திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு சந்திப்பில் தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாள் விழா, தேமுதிக 22ம் ஆண்டு துவக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி புறநகர் மாவட்ட கழக செயலாளர் விஜி வேலாயுதம் தலைமை தாங்கினார், மாவட்ட கழகத் துணைச் செயலாளர் யோசேப்பு, வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் டேவிட், வள்ளியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர், பணகுடி பேரூர் செயலாளர் ரவி, மாவட்ட இளைஞரணி செயலாளர் வசந்த ராஜா ஆகியோர் வரவேற்றனர். இக்கூட்டத்தில் வள்ளியூர் ரயில் நிலையத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன்படுத்தும் வகையில் வீல் சேர் வழங்கப்பட்டது, சுமார் 150க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது, 35 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் பயணித்து வரும் முன்னோடிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும் கேப்டன் விஜயகாந்த் புகைப்படம் வழங்கப்பட்டது, பொதுக் கூட்டத்திற்கு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் சிவக்குமார் நாகப்பன் அவர்கள், தலைமை கழக பேச்சாளர் மணவை வெடிமுத்து என்ற வேதமுத்து, அதிரடி பேச்சாளர் அழகர், சிறப்பு பேச்சாளர் ஆரல் விபி செல்வகுமார் ஆகியோர் தேமுதிக கொள்கைகள் மற்றும் லட்சியங்கள் குறித்தும் பேசினார்கள். மேலும் குடிநீர் பிரச்சனை, பேச்சிப்பாறை அணையில் இருந்து வரும் தோவாளை கால்வாயில் நீரை ராதாபுரம் தொகுதி அனைத்து பகுதிகளுக்கும் கடை மடை வரை கொண்டு சேர்த்தல், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறவழிச் சாலை உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டது. கூட்டத்தில் கழக நிர்வாகிகள் மாவட்ட அவைத் தலைவர் விஜய கணேசன், மாநில மீனவர் அணி துணை செயலாளர் சிலுவை, மாவட்ட பொருளாளர் ஆவின் ராஜா டேவிட், மாவட்ட கழகத் துணைச் செயலாளர்கள் நாலாயுதம், குமார், செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், சங்கர், பாபு, மணி, வள்ளியூர் அவை தலைவர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் விஜயசாந்தி, அதிசய வெனிஸ், வசந்தா, சுமித்ரா, நேவிஸ் மேரி,ஒன்றிய கழகச் செயலாளர்கள் ராதாபுரம் மேற்கு துரைப்பாண்டி, கிழக்கு இசக்கிமுத்து, களக்காடு தெற்கு சக்திவேல், நாங்குநேரி கிழக்கு தினகரன், பாளையங்கோட்டை தருவை சின்னத்துரை, சேரன்மகாதேவி ஆறுமுகதாஸ், களக்காடு பழனி, ஏர்வாடி மீரான், கோபாலசமுத்திரம் ராமசாமி, பத்தமடை கண்ணன், வீரவநல்லூர் ராமர், கல்லிடைக்குறிச்சி நாலாயிர முத்து , சடகோபால், மாவட்டக் கழக நிர்வாகிகள் குமரவேல், தர்மர் ,தான மூர்த்தி, நெல்லை மாரியப்பன், செந்தில்குமார், அருண், ராஜேந்திரன், பரத், செல்லப்பா, பாலச் சுந்தர், இலங்காமணி, தியாகராஜன், நெல்லை ஆறுமுகம், கவின், ஜெய்ஸ், வின்சென்ட் , சுயம்பு ராஜ், அன்பு,ரவி, அவரை குளம் துரை, கிருஷ்ணமூர்த்தி, அன்பழகன், அன்ன பாண்டி,, விஜய சுந்தரலிங்கம், பொன், சேக் மசூது மணிகண்டன், பணகுடி ராஜேஷ், ஸ்கார்ட்லின துரை, ஜோஷ் கிளின்டன், சாமிதுரை, முருகன், உமேஷ், காதர் மைதீன், முகைதீன் அப்துல் காதர், பாபு, கண்ணன், சபா, கோவிந்தராஜ் , ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சமூக வலைதள அணி துணைச் செயலாளர் ஜேசுதாஸ் கண்ணன் நன்றி கூறினார்.