திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரம் மற்றும் ஒன்றிய தனுஷ் நண்பர்கள் தலைமை நற்பணி இயக்கத்தின் சார்பில், நகரம், ஒன்றியம், கிளை மற்றும் பேரூர் மன்றங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பழனி ஒன்றிய நகர தலைவர் நாகேந்திரவீரக்குமார் தலைமை தாங்கினார்.கூட்டத்தில், இயக்கத்தின் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, மன்றங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவது மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இதில் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் பாக்கியராஜ், மாவட்டச் செயலாளர் கண்ணன், பொருளாளர் வீர மணிகண்டன், துணைத் தலைவர் பாண்டி, துணைச் செயலாளர் ஆனந்த் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜெகன், பாலன் ஆகியோர் கலந்து கொண்டு, இயக்கத்தின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கினர்.மேலும், தலைமை நற்பணி இயக்கத்தின் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் தங்கதுரை, ராக்கி, கௌரி காமாட்சி, கார்த்திக் விஷால், மாரிமுத்து, தீபக் உள்ளிட்டோரும், மரியான் பாய்ஸ், ஆடுகளம் அன்பு குரூப், கலிக்கநாயக்கன்பட்டி தனுஷ் மன்றம், பாப்பம்பட்டி உத்தமபுத்திரன் பாய்ஸ் உள்ளிட்ட கிளை மன்ற நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைகளுடன் நடைபெற்ற இக்கூட்டம், இயக்கத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் மன்றங்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் பயனுள்ளதாக அமைந்தது.