டெல்லியில் போதைப் பொருள் கடத்தல்: பெண் உட்பட 2 பேர் கைது.
புதுடெல்லி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெண் உட்பட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.4.75 கோடி மதிப்புள்ள தங்கம், ரூ.56.69 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
டெல்லி வடக்கு பகுதியில் உள்ள நியூ சனோத் காலனியில் போதைப் பொருட்கள் கடத்தல் குறித்து போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண் பார்வதி (42), அவரது கூட்டாளி விகாஸ் குமார் (30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து. ரூ.4.75 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளிநகைகள், ரூ.56.69 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். பார்வதி டெல்லியில் பல ஆண்டுகளாக போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. இவர் மீது போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவில் 12 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் அவரது வீட்டிலிருந்து ரூ.1.5 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...