சேலம் மத்திய சிறையில் காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சிறைவாசிகளுக்கு கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, செஸ், கேரம் போர்டு, வாலிபால், மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்வாண்டு சிறப்பு போட்டியாக சிறைவாசிகளின் பாடும் திறனை கண்டறிந்து ஊக்கவிக்க ஜெயில் சிங்கர் போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் சிறப்பாக பாடிய விசாரணை சிறைவாசி அன்புச்செல்வன் (களூர்) ஜெயில் சிங்கர் - 2026 பட்டத்தினை தட்டிக்கொண்டார்.
மேலும் சிறைவாசிகளின் நடனம் ஆடும் திறனை ஊக்கவிக்க ஜெயில் டான்சர் - 2026 போட்டிகள் நடத்தப்பட்டன. திருச்சியை சேர்ந்த தண்டனை சிறைவாசி சார்ந்தகன் சிறப்பாக நடனம் ஆடி ஜெயில் டான்சர் பட்டத்தினை தட்டிக்கொண்டார்.
விழாவில் கலந்துகொண்ட சிறைவாசிகள் ஒவ்வொரு சிறைவாசிகளுக்கும் வாக்குகள் அளித்தனர். அதன் அடிப்படையில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மனநல அழுத்தம் பாதிப்புள்ள சிறைவாசிகளுக்கும் போட்டிகள் நடத்தி பரிசுகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் (பொ) திரு. G. வினோத் தலைமை தாங்கினார். சிறை அலுவலர்கள் ராஜேந்திரன், சிவானந்தம், நலஅலுவலர் அன்பழகன் சிறைப்பள்ளி ஆசிரியர்கள் சுரேஷ், சித்ரா, விஜயலட்சுமி, மனநல ஆலோசகர்கள் செல்வி குமாரி, மார்ட்டின், விஜயலட்சுமி, மற்றும் சமூகவியல் நிபுணர் நர்மதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்ட சிறைவாசிகள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.