தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று CJP போராட்டம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (அக்டோபர் 10) போராட்டம் தொடங்கப்பட உள்ளது. நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் கடந்த ஜூன், ஜூலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக ஒன்றிய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் விலகினார்.இந்த சூழலில் எஸ்ஐஆர் விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் அக்டோபர் 10ம் தேதி முதல் டெல்லியில் காலவரையற்ற போராட்டம் தொடங்கப்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்தது.போராட்டத்தின் காரணமாக டெல்லிக்கு செல்லக்கூடிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் டெல்லி மெட்ரோவின் 57 ரயில் நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் நேற்று இரவு முதல் மூடப்பட்டது. டெல்லியில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் இன்று ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படும் என்று பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று போராட்டம் நடந்த உள்ள நிலையில் டெல்லியில் இணைய சேவைகளை தற்காலிகமாக முடக்கி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியின் ஜன்பத் - கர்த்தவ்யா பாதை பகுதியைச் சுற்றி 4 கிமீ சுற்றளவில் மொபைல் இணைய சேவைகள் நேற்றிரவு 10 மணி முதல்இன்றிரவு 10 மணி வரை முடக்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதனை தொடர்ந்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.டெல்லி காவல் துறையைச் சேர்ந்த 15,000 போலீஸாரும், ஒன்றிய பாதுகாப்புப் படைகளை சேர்ந்த 23,000 வீரர்களும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஒட்டுமொத்தமாக 38,000 வீரர்கள் டெல்லியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.மேலும், வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் பேருந்துகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. டெல்லி மற்றும் புறநகர்ப் பகுதி விடுதிகள், ஓட்டல்களில் தங்கியிருப்போர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. டெல்லியை ஒட்டிய அண்டை மாநிலங்களின் எல்லைகளில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என டெல்லி காவல்துறை கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு அவசரக் கடிதம் அளித்துள்ளது. முன்பு நடைபெற்ற போராட்டங்களின் போது ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றாததாலும், விதியின் படி, 10 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்காததாலும் அனுமதி மறுக்கப்படுவதாகத் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...