சூப்பர் எல்நினோ தாக்கம்! போதுமான காவிரி நீர் நாகை மாவட்டத்திற்கு கிடைக்குமா? ஒரு போக சாகுபடி கை கொடுக்குமா? கடைமடை விவசாயிகளின் கவலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி குறிப்பு
பெருங்கடம்பனூரை சேர்ந்த விவசாயி பிரகாஷ் கூறும்போது;
வழக்கமாக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் அப்படி திறக்கப்பட்டால் தான் நாங்கள் குருவை சாகுபடி செய்ய இயலும். அதுவே சிறந்தது தான் எனவே ஜூன் 12க்கு முன்பாகவே தண்ணீர் திறக்க வேண்டும் என்று நாங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த ஆண்டு மிகவும் தாமதமாக செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது. இதனால் நாகை மாவட்டத்தில் குழுவை சாகுபடி செய்யப்படாமல் ஒரு லட்சம் ஏக்கரிசாக கிடக்கிறது. அதனை பார்வையிட்டு அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல தற்போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற உள்ளது அதற்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் சிப்பம் விதை நெல் தேவை. அதனை அரசு இருப்பில் வைக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலமாக உழவு செய்ய டிராக்டர் தட்டுப்பாடு இல்லாமல் வாடகைக்கு தர வேண்டும். வாய்க்காலில் இருந்து வயலுக்கு பாயும் அளவிற்கு வாய்க்கால்களில் தண்ணீர் விட வேண்டும்.
கீழ்வேளூரை சேர்ந்த காவிரி தனபாலன் கூறும்போது;
கடந்த ஒன்றாம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அது 15 தினங்களுக்குள் கடைமடைக்கு வந்து சேர வேண்டும். தற்போது வந்து சேர வேண்டிய நேரம். நாகை மாவட்டம் என்பது கடைக்கோடி மாவட்டம். மேலிருந்து தடையில்லாமல் தண்ணீர் கொண்டு வந்தால் தான் அடைமடைக்கு நீர் வந்து சேரும். இந்த ஆண்டு மேட்டூரில் போதிய நீர் இல்லாததால் குறைவான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் இரந்து நீர் வரும் வழியில் சுமார் 2000 கன அடி நீர் திருடப்படுகிறது. அரசு அதை தடுக்க வேண்டும். கீழ்பகுதியில் மதகுகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்திட வேண்டும். மேட்டுப்பகுதிக்கு தண்ணீர் திருப்பி தர வேண்டிய பணியை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். அப்போதுதான் குறைவான அளவுக்கு வரும் தண்ணீரை கடைமடை பகுதிக்கு கொண்டு சேர்க்க முடியும்.
ஒட்டுமொத்த மூன்று வேலை உணவு தேவையில் பெருமளவு பூர்த்தி செய்யும் காவிரி டெல்டா மாவட்டத்தில் வறட்சி நிலவுவதால் கடை மடக்கி போதுமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், விதை உரம் உள்ளிட்ட இடுபொருள்கள் கையிருப்பு அரசு வைக்க வேண்டும், கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன் உடனடியாக வழங்க வேண்டும், வேளாண் துறையினர் எந்த ரக நெல் சாகுபடி செய்ய வேண்டும் என்பதை விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதை கடைமடை விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நாகப்பட்டினம் செய்தியாளர் : ஜான் போஸ்கோ