தஞ்சாவூர் மாவட்டம்,
கோவிலாச்சேரியில் உள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மண்டலங்களுக்கு இடையேயான ஆண்கள் பிரிவு
கபடி போட்டி 28.09.2026 அன்று நடைபெற்றது.
இப்போட்டியில் திருச்சி ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை ராஜாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
போட்டியை அன்னை கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் எம்.அன்வர் கபீர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழக விளையாட்டுச் செயலாளர் டாக்டர் ஏ. பழனிச்சாமி மற்றும் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பி.மாணிக்கவாசகி ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியின் ஒருங்கிணைப்புப் பணிகளை பூண்டி புஷ்பம் கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் முனைவர் சி.மாலதி மேற்கொண்டார். அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி உடற்கல்வித் துறை இயக்குநர் திரு. முத்து மற்றும் உதவி இயக்குநர் திரு. செல்வராஜ் ஆகியோர் போட்டி ஏற்பாடுகளை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளின் முடிவில் திருச்சி ஜமால் முகமது கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அணியினருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.