சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மீது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் தாக்குதல் முயற்சி
சேலம் மாநகராட்சி மேயராக பதவி வகிப்பவர் ராமச்சந்திரன். திமுகவின் மூத்த நிர்வாகியான இவர் கடந்த 2022ம் ஆண்டு முதல் சேலம் மாநகராட்சியின் மேயராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரன் மற்றும் ராமச்சந்திரனுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது ராமச்சந்திரனுக்கு தேர்தல் குறித்த எந்த ஒரு பணிகளையும் வழங்காமல் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் காலம் தாழ்த்தி மேயர் இராமச்சந்திரனை கட்சிப் பணிகளில் இருந்து ஓரம் கட்டி தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வந்தார். இதனை எல்லாம் பொறுத்துக் கொண்டு இராமச்சந்திரன் தனது பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி மேயருக்கு உண்டான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சேலம் மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதை கண்டித்து கடந்த மாதம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுக விசிக உள்ளிட்ட கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து தனியார் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து விட்டு சேலம் வந்தனர். இந்நிலையில் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனின் ஆதரவு கவுன்சிலர்களான ஒன்றாவது வார்டு திமுக கவுன்சிலர் தமிழரசன் நேற்று மாலை மேயர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மேயரிடம் அமைச்சருக்கு எதிராக செயல்படுகிறாயா என்று காது கூசும் அளவிற்கு மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி மேயரை சகட்டுமேனிக்கு திட்டியுள்ளார். இதனிடையே மேயர் இராமச்சந்திரன் அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்டு இது மேயரினுடைய அறை இங்கு இதுபோன்ற அனாசியமான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. இது மிகவும் தவறு. மாவட்ட செயலாளர் ராஜேந்திரனுக்கு எதிராக இன்று மட்டுமல்ல என்றுமே நான் செயல்பட மாட்டேன் அது என் பணியும் கிடையாது நான் எனது மேயர் வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்னை இது போன்ற அசிங்கமான வார்த்தைகளில் பேச வேண்டாம் என பொறுமையுடன் சொல்லி உள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்குமான வாக்குவாதம் முற்றிய நிலையில் கவுன்சிலர் தமிழரசன் திடீரென இருக்கையில் அமர்ந்திருந்த மேயரின் கழுத்தில் கையை வைத்து சட்டையை சுழற்றி மேயரை மேலே எழுப்பி அவரை நெஞ்சில் அடிக்க கையை ஓங்கிய போது மேயர் தரப்பு ஆதரவு கவுன்சிலர்கள் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மேயர் ராமச்சந்திரன் உடனடியாக அலுவலகத்தில் இருந்து வெளியேறி தனது முகாம் அலுவலகத்திற்கு சென்று செய்தியாளர்களை சந்தித்தபோது தனக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரனுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது தேர்தலில் இருந்து தன்னை அவர் புறக்கணித்து வருகிறார் நான் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் என்னுடைய மேயர் பணியை நல்லபடியாக செய்து வருகிறேன். மேலும் மாநகராட்சியின் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத் துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கட்சித் தலைவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வைக்கலாம் என்ற முறையில் தான் சென்னை சென்று அவரை சந்தித்து விட்டு வந்தேன் இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மாவட்ட செயலாளரின் ஆதரவு கவுன்சிலர்கள் என்னை சகட்டி மேனிக்கு அருவருப்பான கெட்ட வார்த்தைகளால் தன்னை திட்டி அலுவலகத்திற்கு உள்ளேயே என் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. இன்று நடைபெற்ற சம்பவத்தை வைத்து பார்க்கும் போது தனக்கு ஏதோ ஒன்று மிகப் பெரிய அளவில் நடக்கப் போகிறது அது தவறாக தனக்கு தென்படுவதாக மேயர் இராமச்சந்திரன் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து காவல்துறையில் நான் புகார் அளிக்க போவதில்லை காரணம் இது என் கட்சி விஷயம் இது குறித்து நான் புகார் அளித்தால் என் கட்சிக்கும் என் கட்சித் தலைவருக்கும் அவமானம் ஏற்பட்டுவிடும். இருப்பினும் கட்சி தலைமை இடத்தில் நடைபெற்ற அருவருப்பான கூற்றுக்களை கொடுத்து விவரமாக எடுத்துரைப்பேன். அதற்கு மேல் கட்சி தலைமை என்ன முடிவு செய்கிறதோ செய்து கொள்ளட்டும். என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்தார். மேயர் அறைக்குள்ளே நுழைந்து அவரை தாக்குதல் நடத்த முற்பட்ட கவுன்சிலருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது என்று பல்வேறு வினாக்களை மேயரின் ஆதரவு கவுன்சிலர்கள் பொதுமக்களிடமும் செய்தியாளர்களிடமும் தெரிவித்தனர். இதிலேயே மேயர் அறைக்குள் நுழைந்து முன்னாள் அமைச்சர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் மேயர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...