அம்மா உணவக பணியாளர்களாக 2013 முதல் 14 ஆண்டுகள் தினக்கூலி அடிப்படையில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தற்பொழுது தினக்கூலியாக ரூ.325/- அரசு வழங்கி வருகிறது.
எங்களுக்கு சம்பளத் தொகையை மகளிர் சுய உதவி குழுவில் வரவு வைத்து எங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் சம்பளத் தொகையை வரவு வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆனால் எங்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் தனித்தனியாக PF பிடித்து வருகிறார்கள். எங்கள் PF கணக்கில் வரவு வைப்பதில்லை.
மேலும் எங்களுக்கு ESI குடும்ப கார்டு வழங்கவில்லை. கொராணா தொற்று காலத்தில் எங்களது குடும்பத்தையும் பாராமல் பொதுமக்களுக்கு சிறப்பாக உணவு வழங்கி பணியாற்றினோம்.
தற்பொழுது உணவகத்தில் பணியாற்றிவரும் ஊழியர்களின் கணவர் மறைந்து விட்டார்கள். இங்கு கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் உள்ளனர்.
மேலும் பணியாளர்கள் மிகவும் பின்தங்கிய குடும்பத்தினர் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குடும்பம் நடத்தி வருகிறார்கள்.
மேலும் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விபத்து ஏற்பட்டு காயம் ஏற்பட்டால் எவ்வித மருத்துவ உதவியும் கிடைப்பதில்லை. எனவே உயர்திரு. சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எங்களுடைய கோரிக்கையை ஏற்று எங்களுக்கு பணிநிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்கவும் PF மற்றும் ESI குடும்ப கார்டு வழங்க ஆவண செய்யுமாறு தங்களை மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.