பேரறிஞர் அண்ணா 118வது பிறந்தநாள் விழா! சேலம் மாநகர அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் பேரறிஞர் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் அண்ணாவின் 118வது பிறந்தநாள் விழா, இன்று தமிழகம் முழுவதும் அதிமுகவினரால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிறது. இதனைத் தொடர்ந்து சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு, சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் ஏகேஎஸ்எம் பாலு தலைமையில் மாநகர் மாவட்ட அதிமுகவினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேரறிஞர் அண்ணாவின் அரசியல் பொன்மொழிகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். அண்ணாவின் வழியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் செயல்பட்டது போல், மூவரின் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வரும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கரங்களை வலுப்படுத்தி தமிழகத்தில் மீண்டும் அண்ணா திமுகவின் ஆட்சி மலர அண்ணாவின் 118வது பிறந்த நாளான இன்று அனைவரும் சபதம் ஏற்போம் என நிர்வாகிகள் இடையே மாநகர் மாவட்ட செயலாளர் பாலு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலசுப்பிரமணியம், சக்திவேல், எம்.கே.செல்வராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் மாநகர் மாவட்ட அனைத்து பகுதி செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த சிறப்பு விழாவில் கலந்துகொண்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...