டிக்கெட் விலையை உயர்த்திய விமான நிறுவனங்கள்
விமான எரிபொருள் விலை உயர்வால் டிக்கெட் விலை உயர்த்தப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.அமெரிக்கா - ஈரான் இடையேயான போரால் உலகளவில் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டு, எண்ணெய்ப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாக பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விமான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அதன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.விமான எரிபொருள் விலை உயர்வையடுத்து, விமான டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கப்படுவதாக சமீபத்தில் இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்தது.இந்த நிலையில், எரிபொருள் எரிபொருள் விலையால் உள்நாட்டு மற்றும் குறிப்பிட்ட சர்வதேச வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்களின் டிக்கெட்டுகள் அதிகரிக்கப்படுவதாக ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மேலும், ஆகாசா ஏர் நிறுவனமும் டிக்கெட் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. அக். 9 முதல் விலை உயர்வு அமல்படுத்தப்படுகிறது.பயண தொலைவுக்கு ஏற்றவாறு டிக்கெட்டுகளின் விலை உயர்வு இருக்கும் என்று ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...