அதிமுக சுயபரிசோதனை செய்ய வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
இடைத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ள அதிமுக தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பாமகவின் அன்புமணி தெரிவித்துள்ளார். இன்று (அக்டோபர் 10) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமகவின் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ''ஜனநாயக ரீதியில் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. கடந்த கால இடைத்தேர்தல் எல்லாம் இடைத்தேர்தலாக இல்லாமல் எடைக்கு எடைக்கு பணம் பொருள் கொடுக்கும் தேர்தலாக இருந்தது. மக்களை ஆடுகள் மாடுகள் போல சந்தைகளில் அடைத்து வைத்து பணத்தை கொடுத்து, மதுவை கொடுத்து, உணவை கொடுத்து வாக்களித்து வெற்றி பெற்ற காட்சிகளை எல்லாம் நாம் பார்த்தோம். ஆனால் இன்று பணம் கொடுக்காமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஜனநாயக ரீதியில் பிரச்சாரம் செய்து இடைத்தேர்தல் நடைபெற்றது
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...