ஈரோட்டில் போதை மாத்திரை விற்க முயன்ற 7 வாலிபர்கள் கைது: சிறையில் அடைப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாலிபர்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலின் பேரில் கருங்கல்பாளையம் போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர்.அப்போது வாட்டர் ஆபீஸ் நான்கு சாலை அருகே சோதனை செய்த அவ்வழியாக வந்த வாலிபர்கள் சிலரிடம் போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பதும் அவற்றை விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது .இதனை தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் ஈரோட்டை சேர்ந்த கவதம், நவீன்குமார், தனுஷ்வர்தன், அகிலன், விக்கி ,ரவிக்குமார் ஆகிய ஏழு வாலிபர்கள் என்பதும் இவர்கள் போதை மாத்திரைகளை பயன்படுத்தியும் அதனை விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 7 பேரையும் கைது செய்த கருங்கல்பாளையம் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...