நாகையில் நடைபெற்ற அத்தி மரத்திலான 32 அடி உயர விஸ்வரூப வினாயகர் ஊர்வலம்: மேளதாளங்கள் முழங்க மக்கள் ஆடிப்பாடி உற்சாகம்.
பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு ஆண்டும் 32 அடி விஸ்வரூப விநாயகர் ஊர்வலம் அதி விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 39வது ஆண்டாக 16 டன் எடையில் அத்தி மரத்திலான 32 அடி பிரம்மாண்ட அத்தி விநாயகரின் ஊர்வலம் இன்று இரவு நடைபெற்றது. பிரசித்தி பெற்ற நாகை நீலாதாட்சி அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட விஸ்வரூப விநாயகர் ஊர்வலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்தர் வடம் பிடித்து இழுத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். 10 க்கும் மேற்பட்ட வண்ணமயமான மின் அலங்கார விநாயகர் சிலைகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாகவலம் வந்தன. தப்பாட்டம், கேரளாகதகளி கலைஞர்களின் ஆட்டத்துடன் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆடிப்பாடி விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடினர். மேலும் ஊர்வலத்தில் சென்டைமேளம் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் நடைபெற்ற ஊர்வலத்தில், நாகை முதல் நாகூர் வரை வழிநெடுகிலும் நின்றிருந்த மக்கள் பிரமாண்டமான அத்தி விநாயகர் சிலைக்கு பூஜை செய்தும், ஆயிரக்கணக்கான தேங்காய்கள் உடைத்தும் விநாயகருக்கு பிடித்த பலகாரங்களை படைத்தும் வேண்டிக் கொண்டனர். நாகையிலிருந்து நாகூர் வரை 10 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட அத்தி விநாயகர் கீழ் வைக்கப்பட்டிருந்த பிரதிஸ்டை விநாயகர் சிலையினை நாகூர் வெட்டாற்றில் பக்தர்களால் அதிகாலை கரைக்கப்பட்டது. விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் ஊர்வலம் செல்லும் பாதையில் நாகப்பட்டினம் மற்றும் நாகூரில் அதிகாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பிரபல இசை அமைப்பாளர் தேவா, சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ், தெலுங்கு, கன்ன...
இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச் சேர்ந்...
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை 500 பிளாட் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தி முனையில் மி...