திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு அருகே
வடக்கன்குளத்தில் அமைந்துள்ள ஜாய் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் எஸ்.ஏ ஜாய் ராஜா விழாவிற்கு தலைமை தாங்கினார்.
துணைவேந்தர் முனைவர் வைபவ் மேஷ்ராம் அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் தலைமை விருந்தினராக தமிழ்நாடு முன்னாள் டிஜிபி முனைவர் சைலேந்திர பாபு ஐபிஎஸ் (ஓய்வு) அவர்கள் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். மாணவர்கள் பெற்ற கல்வியை சமூக மேம்பாட்டிற்கு தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப திறமைகளை கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்றும் நம் வாழ்வின் நோக்கம் என்ன நாம் கற்ற கல்வியின் நோக்கம் என்ன என்றும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
கௌரவ விருந்தினராக பெங்களூரு நிட்டே கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவர் முனைவர் சந்தீப் சாஸ்திரி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பை முடித்த 84 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. துறை வாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ரோனக் உசைன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்கலைகழகத்தின் இணை துணைவேந்தர் முனைவர் ஜாண் டி பிரிட்டோ கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.